Friday, December 28, 2007

என் முகவரி !!





எனக்கான முகவரியை உருவாக்க முயற்சிக்கையில்
முன்னோடிகழாக சிலரை தேர்வு செய்தபின்
ஏனோ மனம் எவரையும் ஏற்கவில்லை.

காரணம் ஓவொருவரும் ஒருவகையில்
சிறந்திருக்கின்றனர் தாழ்ந்திருக்கின்றனர்,

சிறப்புற்றவர் யாரும் பொறுப்புடயிர் இல்லை
பொறுபுற்றவர் யாரும் சிறப்பு பெற்றவர் இல்லை ..

இன்னாரின் பிள்ளை என்ற முகவரியை மாற்றுவதற்கான தேடல்..
ஆதலால் அப்பாவையும் பின்பற்ற மனமில்லை ..

படித்த புத்தகங்களும்,பட்ட அனுபவங்களும்
ஏனோ என்னை தெளிவுபடுத்த தவறிவிட்டன !!

குழம்பிய குளத்தில்தான் மீனை பிடிக்க முடியும் என்பர் !!
நானும் தேடுகிறேன் எனக்கான மீனை,குழம்பிய என் மனதில்
கிடைத்தபாடில்லை ..

என்னுடைய விளையாட்டை விளையாட முற்பட்டபின்
சட்டங்கள் மட்டும் வேற்றார் செய்வதா ?
இதுவரை முயற்சிக்காத புதிய துறை ..

புதிய முகங்கள் ..புதிய அனுபவதுக்கான தேடல் !!

குழப்பத்துடன் மனதில் ஒரு கேள்வி .
என்னால் முடியுமா ??

நம்பிக்கையில் மட்டுமே வாழ்கை நகர்வதால் ..
முடியும் என்று முழுமனதுடன் நம்புகிறேன் ..
முழுமனதாய் முயற்சிக்கிறேன் ..
முடியும் .. என்னால் முடியும் !!

Wednesday, December 19, 2007

Defeats !


இப்போதெல்லாம் எனக்கு தோல்விகள் பிடித்திருக்கிறது ,
வீழ்வதையும் விரும்புகிறென்
முயற்சிகளை வேகப்படுத்தி இருக்கிறேன்
இதற்கு காரணம் அண்மையில் படித்த அருமையான ஒரு வாசகம்

" The Game is not yet over , because i haven't won yet "

Sunday, December 2, 2007

ஹைக்கூ.

பிச்சைக்காரர்களின் ஆசை !



எங்களுக்கும் தான் ஆசை
ஒரு நாள் ஒரு வேளையாவது உண்ண வேண்டும் என்று !

சமீபத்தில் பதில் சொல்ல சிந்திக்கவைத்த ஒரு கேள்வி .


ஏன் இந்த வாழ்க்கை?

இளமை அனுபவிக்க வேண்டிய வயதாம்
இது யார் சொன்னது....

ஏன் இந்த வாழ்க்கை?
எதற்க்காக...


< வலையில் சிக்கிய சில துணுக்குகள் >

சமீபத்தில் ரசித்த அருமையான ஒரு ஜோக் !


சில எறும்புகளும் ஒரு யானையும்:
--------------------------------

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."

Tuesday, November 20, 2007

ஏய் கடலே !


மீண்டும் மீண்டும் நீ படையெடுப்பது எதற்காக ?

எதற்காக இந்த முயற்சிகள் ?

எதை / யாரை கவர்ந்து செல்வதற்காக இந்த போராட்டம் ??

உன்னை கண்ணி என்பதா அல்ல காளை என்பதா ?

காளை எனில் கரையில் இருக்கும் கண்ணிகளை கவரவா இந்த போராட்டம் ?

இல்லை கண்ணி எனில் கரையில் விளையாடும் காளையர்களை கவரவா ?

ஏதாய்யிநும் சரி கரையில் குதுகளிக்கும் எம் நாட்டின் எதிர்காலங்கள் பத்திரம் !

உன் ஆணவ போக்கை அவர்களிடம் காட்டாதே !

உன் சூட்சுமம்கல் இன்னும் எங்களுக்ககே புரிந்தபாடில்லை !

பாவம் அவர்கள் விட்டுவிடு அவர்களை, நிம்மதியாய் விளையாட !!

இரயிலுக்காண காத்திருப்பு !



தீப திருநாள் கொண்டாட பிறந்த ஊர் பயணிக்க இரயிலுக்காக காத்திருக்கிறோம் ,
வழி மேல் விழி வைத்து ! வண்டிதான் வந்தபாடில்லை .

வண்டி இரண்டு மணிநேரம் தாமதம் என தெரிந்தே மெதுவாக சென்றும் பயனில்லை !
ஏனெனில் வண்டி மூன்று மணிநேரம் தாமதமாம் !

காத்திருப்போர் கண்களில் ஏதோ எதிர்பார்ப்பு !
வேறென்ன இரயிலுக்காத்தான் !
நித்தம் நிகழும் காத்திருப்பு ,ஏன் நிமிடங்கள் கூட நிகழத்தான் செய்கிறது .

காத்திருபோரை இரயில் தான் எரிச்சல் படுத்தியது என்றாள்
மேலும் எரிச்சலடைய செய்தது கடமையே கர்மம் என நடித்த
போலீஸ்காரர்களின் சோதனை !

சிலமணி காத்திருப்புக்குள் எனது உனது என உரிமை கொண்டாடும் விந்தை மனிதர்கள் !

உட்கார மனமில்லாமல் காற்றாட கால்போன போக்கில்
நடந்து கொண்டே அரசியல் விவாதங்கள் ,சீர்திருத்த யோசனைகள்
அனைத்தையும் பேசிக்கொண்டே நேரத்தை ப்போக்கிக்கொண்டிருக்கிறோம் !

இரயில் வந்து சேர உள்ளது என்ற அறிவிப்பு அனைவர் முகத்திலும் சிறு சந்தோசத்ை ஏற்படுத்தியது !

அதுவரை அமைதியாய் இருந்த மக்கள் திடீறென சுருசுப்பாய் நடை தளம் நோக்கி நகர

எல்லோரும் ஒன்றாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்று புரியாமல் மற்றவரை முந்தி செல்லும் சிலர்
வேடிக்கையாய் சிரித்துகொண்டே நாங்களும் நடக்க ஆரம்பித்தோம் !

மிகவும் மோசமான பராமரிப்பு செய்யப்பட்ட இரயில் பெட்டிகள் ,
வண்டியினுள் ஏறியவுடன் மூகம் சுழிக்க செய்யும் துர்நாற்றம் , மாசு படிந்த படுக்கைகள்
என்ன செய்ய வேறு வழி இல்லை !

புதிய முகங்கள் , புதிய அனுபவங்கள் ,இரயில் வந்து சேர்ந்த சந்தோசம் ,
இவை போதுமே !!
படுக்கையில் ஏறி சந்தோசமாய் தலைசாய்த்து
சொந்த மன் நோக்கி பயணிக்க முற்பட்டோம் !

Wednesday, November 14, 2007

இனிமையான பொழுது !!!



லேசான மழைதூறல் ,ரம்மியமான மாலைப்பொழுது ,
மழையை ரசித்தபடி நனைந்துகொண்டே மெதுவாக வண்டியில் சென்று கொண்டிருக்கிறேன் !
அழகான கண்ணி ஒருவள் என்னை நோக்கி ஏதோ சொல்ல வருகிறாள் ,
திடீரென ஒரு குரல் " டேய் எறும மாடு மணி 9.15 ஆகுது ஏந்திரிடா "
எழ மனம் இல்லாமல் தூக்கம் துறந்து கணாவை கலைத்து
நண்பனை முறைத்து ( கனவை களைத்து விட்டான் என்பதற்காக)
எழுந்து புறப்படுகிறேன் அலுவலகம் செல்ல !!
யார் அந்த கண்ணி ?? என்ன சொல்ல வந்திருப்பாள் ?? என்ற கேள்வியுடன் .

Tuesday, October 23, 2007

இது இலையுதிர் காலம்...


< Good one !! goes well 4 all >

செம்மண் புழுதி படிந்த தடங்களில்
பாதைகளே தெரியாமல்
எங்கும் உதிர்ந்த சருகுகள் ..

இலைகளே இல்லாமல்
கிளைகள் மட்டுமே கொண்டு
வெற்றுக் கைகளை
நீட்டும் மரங்கள்..

வெற்றிடத்தில் சோலைகள் தேடி
சில வண்ணத்துப் பூச்சிகள்..
கூடுகள் வைக்க பசுமைகளை
தேடும் பல பறவைகள்..

உள்ளத்தில் உறுதியை
மட்டுமே கொண்டு
வெற்றுக் கைகளை மட்டுமே
ஏந்தி நிற்கிறேன்
ஒரு இலை உதிர் காலத்தில்..

உரம் உண்டு மனதில் எப்பொழுதும்..
திறம் கொண்டு தேடுகிறேன்
வாழ்க்கையின் சிகரங்களை..

வெற்றியின் சாமரங்கள் ஏனோ
தொலைவில் அசைகின்றன..
ஜெயத்தின் திசைகளை தேடி
என் பயணத்தை தொடங்குகிறேன்..

உதிர்பவை எல்லாம் துளிர்ப்பது
இயற்க்கையின் விதிகள் என்றால்..
மாற்றங்கள் தான்
காலத்தின் நியதிகள் என்றால்..

நாளைய வெளிச்சத்திற்கான
என் இலையுதிர் காலம் இது.

Courtesy இர.குமார்.(தமிழ் கவிதைகள் community)

Thursday, October 11, 2007

ஆடி அடங்கும் வாழ்க்கையடா மானிடா !!


(அடிபட்டு ஆபத்தான நிலையில் KMCH (KOVAI MEDICAL CENTER & HOSPITAL) - ICU 'வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அப்பா ,மன போராட்டங்களுடன் ICU ' வின் வெளியில் நான் )


ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கும் கூட்டம் ஒரு புறம்,
மதம் பாராமல் வேறு ஒருவருக்காக பிராதனைய் செய்ய வந்த வேற்று மத குருவை தங்கள் குழந்தை நல்ல படி
குணமடைய பிராத்தனை செய்ய வேண்டும் கூட்டு குடும்பம் மறு புறம்,

உயிர் போகும் தறுவாயில் இருக்கும் உறவை பார்க்க நிற்கும் கூட்டம் ஒரு புறம் ,
உறவை எப்படியேனும் காப்பாற்ற மருத்துவரிடம் மன்றாடும் மனிதர்கள் மறு புறம் .

உயிர் போன உறவை இறுதி ஊர்வலம் கூட்டி செல்ல காத்திருக்கும் குழுக்கள் ஒரு புறம்,
உறவுகளை துளைத்த துக்கத்தில் கூக்குறலிடும் கூட்டம் மறு புறம் .

உணர்வுகள் துளைத்து கடமையெ கர்மமாய் இருக்கும் ICU காவலாளி ,
உயிரற்ற உடல்களை உதவாத பொருள் போல் தூக்கி செல்லும் ஊழியர்கள் ,
தெய்வமாய் உருமாறி நிற்கும் மருத்துவர்கள் ,
என்றும் உதவும் கரங்களுடன் எனது மதிப்பிற்குரிய மாமா ,
ஈர கண்களுடன் எனது அம்மா ,
பக்குவ பட்டு கொண்டிருக்கும் நான் ,
எல்லோர் கண்ணில் மிஞ்சியது என்னவோ எதிர்பார்ப்பும் ஏக்கமுமே...

எங்கே போனது மானுட கர்வம் , நான் என்ற ஆணவம் , எனது என்ற உரிமை ,
எனது மதம் என்ற மிருகம் ???

ஆபத்து எனின் தான் மனிதம் வெளிப்படுகிறது , உறவுகள் தேடுகிறது ,நட்புகளை நாடுகிறது ஏன் இப்படி ?

" செய்யும் தொழிலே தெய்வம் , தொழில் செய்யும் இடமே கோவில் ", இது மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் மட்டுமே சரியாக பொருந்தும் !

" காதலித்துப்பார் உலகம் அர்ததப்படும் ",
இது கள்ளிக்காட்டு கவிஞன் சொன்னது .

" ICU முன் சில தினங்கள் இருந்து பார் ,அண்டம் அர்ததப்படும் "
இது இந்த மந்தங் காட்டு கவிஞன் சொல்வது !!


ஆடி அடங்கும் வாழ்க்கையடா மனிதா !!
ஆறடி நிலமே சொந்தமடா !

Tuesday, September 25, 2007

வாழ்க்கை தத்துவம் !! < வெற்றியின் தத்துவமும் கூட >


அலுவல் முடித்து வீடு நோக்கி வேகமாய் பயணிக்கிறேன் ,
மிக சிறந்த வாகனம் என்ற ஆணவத்துடன் அசுர வேகத்தில்.
இருப்பினும் முன் செல்லும் பேருந்தை
என்னால் முன்னேற முடியவில்லை.
அறுகே ஆர்ப்பாட்டம் இல்லாமல் அனைவரையும்
முன்னேறி செல்கிறது ஒரு வாகனம்!
பின் தொடர்ந்தேன் புலப்பட்டது உண்மை !

முன் செல்வொரின் போக்கு அறிந்து ,
சமமானவர்களின் வேகம் புரிந்து ,
தன் பலம் தெரிந்து ,நோக்கம் தெளிந்து
நிதானமாய் முற்பட்டால் கிடைக்கும் வெற்றி என்று !!

சிந்தித்தேன் செயல்பட்டேன் !
வீடு சேர்த்தேன் வெற்றியுடனே (அனைவரையும் பின்தள்ளி),
தத்துவம் தேர்ந்த தெளிவுடன் !!

Saturday, September 22, 2007

நெட்டில் சுட்டவை


பாட‌ம் ந‌ட‌த்தும் ப‌ற‌வைக‌ள்
------------------------------------------

பறவைகள் உலகத்தில்..

"பறுக்கை சோறு என்றாலும்
பகிர்ந்துண்ணும் காக்கையிடம்
கற்றுக்கொள்ளலாம்
பறவைநேய பண்பை".

"அவசரம் இல்லை என்றாலும்
அதிகாலையிலேயே எழுந்துவிடும்
சேவல் சொல்லித்தருகிறது
சுறுசுறுப்பை".

"பறக்கத் தெரியாவிட்டாலும்
மற்ற உயிர்களிடம்
பழகத் தெரிந்திருக்கிறது
பெங்குவின் பறவைக்கு".

"வ‌றுமையிலும் பொறுமைகாக்க‌
தெரிந்து வைத்திருக்கிற‌து
மீன்கொத்தி ப‌ற‌வை".

"க‌ல‌ப்ப‌டமாக இருந்தாலும்
த‌ர‌மான‌வ‌ற்றை ம‌ட்டும்
ஏற்றுக்கொள்ள் தெரியும்
அன்ன‌ப் ப‌ற‌வைக்கு".

"சிறிய‌ உருவம்தான் என்றாலும்
எப்போதுமே சிரிப்புடன் இருக்கும்
சிட்டுக்குருவி".

Friday, September 21, 2007

சில முடிவுகள் தவறாகத்தான் செய்கின்றன !


கணிப்பொறியில் கைப்தித்து
வாழ்கையில் தடம் பதிக்க நினைத்து
கணினிதுறையில் கால்வைத்தபின்தான் புலப்பட்டதது
தவறாண தடம் வந்துவிட்டோம் ஏன்று !

உறவுகள் பிரிந்து,உறக்கம் துளைத்து உழைத்தும்
மிஞ்சுவது என்னவோ
Appraisal'க்கான எதிர்பார்ப்புதான் !
அதில் கிடைப்பதும் என்னவோ கூட்டாஞ்ச்சோற்றின் பங்குதான் ,
அதிரிப்தியெ ஆயினும்
இதில் வேறு வழி இல்லை .

கண்ணில் கண்ட வரை
இங்கு
கடின உழைப்பாளிகள் உழைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் !
சுகாவாசிகள் சுகமகவேதான் இருக்கிறார்கள் .
அப்போ இங்கே உழைப்புக்கு மதிப்பில்லையொ ?

பணமே தான் வாழ்க்கை என்பதால்
இங்கு
மிக சிலரே மனிதனாய் வாழ்கிறார்கள்.

அப்படியாயின் மனிதம் பணம் சார்ந்ததா ?

எண்ணில் அடங்கா கேள்விகளுடன்
மனம் நெருடும் ஆதங்கங்களுடன்
மனிதனாகவே
இருக்க போராடவேண்டிய நிலை.

எங்கேயாவது
மனிதம் உயிருடன் உள்ளதா ?

கதிரவன்முன் கனவுகளை துளைத்துவிட்டு
அதை காரிருளில் தேடும் பாமரன் ...

Friday, August 10, 2007

Departed impressionS

Its really been quite sometime i stopped being a normal person coz i want to feel real and distinct .Ofcourse every on is distinct by some ways ,but not really in all the means !

At one point of time i started finding something say some sort of complexness in myself and i started sensing that i am more like a normal person,I find myself compared to a composite machinery doin a routine set of jobs.

Life has started bugging me and started firing me with one question
Are u living ur life ?

and im set in searching answer for that !