Thursday, October 11, 2007

ஆடி அடங்கும் வாழ்க்கையடா மானிடா !!


(அடிபட்டு ஆபத்தான நிலையில் KMCH (KOVAI MEDICAL CENTER & HOSPITAL) - ICU 'வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அப்பா ,மன போராட்டங்களுடன் ICU ' வின் வெளியில் நான் )


ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கும் கூட்டம் ஒரு புறம்,
மதம் பாராமல் வேறு ஒருவருக்காக பிராதனைய் செய்ய வந்த வேற்று மத குருவை தங்கள் குழந்தை நல்ல படி
குணமடைய பிராத்தனை செய்ய வேண்டும் கூட்டு குடும்பம் மறு புறம்,

உயிர் போகும் தறுவாயில் இருக்கும் உறவை பார்க்க நிற்கும் கூட்டம் ஒரு புறம் ,
உறவை எப்படியேனும் காப்பாற்ற மருத்துவரிடம் மன்றாடும் மனிதர்கள் மறு புறம் .

உயிர் போன உறவை இறுதி ஊர்வலம் கூட்டி செல்ல காத்திருக்கும் குழுக்கள் ஒரு புறம்,
உறவுகளை துளைத்த துக்கத்தில் கூக்குறலிடும் கூட்டம் மறு புறம் .

உணர்வுகள் துளைத்து கடமையெ கர்மமாய் இருக்கும் ICU காவலாளி ,
உயிரற்ற உடல்களை உதவாத பொருள் போல் தூக்கி செல்லும் ஊழியர்கள் ,
தெய்வமாய் உருமாறி நிற்கும் மருத்துவர்கள் ,
என்றும் உதவும் கரங்களுடன் எனது மதிப்பிற்குரிய மாமா ,
ஈர கண்களுடன் எனது அம்மா ,
பக்குவ பட்டு கொண்டிருக்கும் நான் ,
எல்லோர் கண்ணில் மிஞ்சியது என்னவோ எதிர்பார்ப்பும் ஏக்கமுமே...

எங்கே போனது மானுட கர்வம் , நான் என்ற ஆணவம் , எனது என்ற உரிமை ,
எனது மதம் என்ற மிருகம் ???

ஆபத்து எனின் தான் மனிதம் வெளிப்படுகிறது , உறவுகள் தேடுகிறது ,நட்புகளை நாடுகிறது ஏன் இப்படி ?

" செய்யும் தொழிலே தெய்வம் , தொழில் செய்யும் இடமே கோவில் ", இது மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் மட்டுமே சரியாக பொருந்தும் !

" காதலித்துப்பார் உலகம் அர்ததப்படும் ",
இது கள்ளிக்காட்டு கவிஞன் சொன்னது .

" ICU முன் சில தினங்கள் இருந்து பார் ,அண்டம் அர்ததப்படும் "
இது இந்த மந்தங் காட்டு கவிஞன் சொல்வது !!


ஆடி அடங்கும் வாழ்க்கையடா மனிதா !!
ஆறடி நிலமே சொந்தமடா !

3 comments:

சக்தி பிரகாஷ் said...

this is really great..
My heart-felt appreciations sakthi.. keep going..

- Sakthi Prakash N
http://when-i-rest-i-rust.blogspot.com/

thennarasu said...

நண்பர் தயா மூலமாக இந்த வலைப்பதிவு பற்றி அறிமுகம் கிடைத்தது... இது ஒரு தகவல் தொழில் நுட்ப துறையை சார்ந்தவர் வலைப்பதிவு என்பதாலோ என்னவோ எனக்கு உடன் படிக்கும் ஆர்வம் ் தொற்றி கொண்டது.... அதற்கான காரணமும் உண்டு பொதுவில் தகவல் தொழில் நுட்ப துறையை சார்ந்தவரின் வலைப்பதிவு ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களை கொண்டிருப்பதை பார்த்து இருக்கிேறான்...குறிப்பாக தங்கள் வேலை பற்றி எள்ளல் தொணி, சமுதாய கட்டமைப்பு மீதான சிறு ஆவேசம் அல்லது விமர்சன பார்வை.... இவை ஆங்காங்கே இந்த வலைபதிவில் தென்பட்டாலும் நான் உணர முற்பட்டது வேறு ஒன்று...

நண்பர் வாஞ்சி யை நன்றாக அறிந்தவர்கள் அவரின் முகத்திலும் அவரது பேச்சு நடையிலும் ஒரு விதமான எளிமை இருப்பதை உணர்திருப்பார்கள்... அதன் தாக்கம் இந்த வலை பதிவிலும் காண முடிகிறது... தான் கட்டுரைகளுக்கான கருத்துக்களை உலகத்தின் மூலைகளில் தேடி அலையாமல் தான் வாழ்விலிருந்தே எடுத்திருப்பது மிகவும் ரசனைக்குறியது... அதிலும் அந்த ICU-விற்கு வெளிய நடக்கும் அவரின் மன உணர்வுகள் பற்றி சொல்லியே ஆகா வேண்டும்... அந்த கட்டுரை சிறியது தான் என்றாலும் அவர் இறுதியாக
" ICU முன் சில தினங்கள் இருந்து பார் ,அண்டம் அர்ததப்படும் " என்னும் வார்த்தை நிதர்சனமாணவை. இக்கட்டுரை நண்பரை இன்னும் வீரியமாக எழுதும் ஆற்றல் உள்ளவர் என்பதற்கு சான்றாக நின்றாலும் நான்
கவனித்தாது அவரின் பக்குவ பட்ட மனம்... இப்படி வாழ்வை மேடு
பள்ளமாக அல்லாமல் சம தளமாக பார்க்கும் பக்குவப்பட்ட மனம் எத்துணை பேர்க்கு கிட்டி விட போகிறது. துணை எழுதித்ில் எழுத்தாளர்
S.Ramakrishnan 'மருத்துவமனையில் பழங்கள் கூட வாசனையை இழந்து ப்லாஸ்டிக் பொருளை போல் ஆகிவிடுகின்றன' என்ற சொன்னதாக ஒரு நினைவு...அது மருத்துவ மனையை பற்றி ஒரு பரிமாணத்தை அழித்தது... நண்பரின் கருத்துக்கள் எனக்கு முற்றிலும் வேறு ஒரு பரிமாணம் காட்டுகிறது...

இயக்குநர் பாலா அவர்கள் " எனக்கு மயாணத்தை பார்க்கும் போது எல்லாம் ஜெயாகந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதை நினைவுக்கு வரும் " என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்...அது போலவே எனக்கு இனி மருத்துவமனை என்றால் நண்பரின் " ICU முன் சில தினங்கள் இருந்து பார் ,அண்டம் அர்ததப்படும் " எனும் வரிகள் நிச்சயம் நினைவுக்கு வரும்....

வீட்டிற்கு வேகமாக விரைந்து செல்லும் போது கூட தான் வாழ்விற்கான தத்துவத்தினை தேடி கொள்ளும் மனம் அவரை காலம் ஏதோ ஒரு சிறப்பான இடத்திற்கு அழைத்து செல்ல தயார் செய்வதாகவே நான் உணர்கிறேன்.... கவிதைகளில் கூட நான் காண்பது தான் வாழ்வில் நடக்கும் சாதாரண சம்பவங்களை ஒரு தேர்ச்சியுடன் ருசிப்பது தான்... அது தான் அவரின் வாழ்வில் இனிமைகளை சுரக்க செய்ய போகிறது...

இறுதியாக நண்பரிடம் நான் வேண்டுவது, நிறைய எழுதுங்கள் ,விரிவாக எழுதுங்கள் , வலைபதிவிற்கு இன்னும் கூடுதல் நேரம் செலவிடுங்கள்....

coffee shop-இல் நண்பனுடன் அமாற்து பேசுவதற்க்கும் , கடற்கரை உப்பு காற்றை முகத்தில் வாங்கியபடி , மணலில் கால் புதைத்து கொண்டு ஆகாயத்தில் கனவுகளை தேடி கொண்டு கதை பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு... நான் நண்பரின் வலைபதிவை இரண்டாவது ராகமாக உணர்கிறேன்

நட்புடன்
தென்னரசு

Vasan said...

great and cent percent true vanchi...