Tuesday, November 20, 2007

இரயிலுக்காண காத்திருப்பு !



தீப திருநாள் கொண்டாட பிறந்த ஊர் பயணிக்க இரயிலுக்காக காத்திருக்கிறோம் ,
வழி மேல் விழி வைத்து ! வண்டிதான் வந்தபாடில்லை .

வண்டி இரண்டு மணிநேரம் தாமதம் என தெரிந்தே மெதுவாக சென்றும் பயனில்லை !
ஏனெனில் வண்டி மூன்று மணிநேரம் தாமதமாம் !

காத்திருப்போர் கண்களில் ஏதோ எதிர்பார்ப்பு !
வேறென்ன இரயிலுக்காத்தான் !
நித்தம் நிகழும் காத்திருப்பு ,ஏன் நிமிடங்கள் கூட நிகழத்தான் செய்கிறது .

காத்திருபோரை இரயில் தான் எரிச்சல் படுத்தியது என்றாள்
மேலும் எரிச்சலடைய செய்தது கடமையே கர்மம் என நடித்த
போலீஸ்காரர்களின் சோதனை !

சிலமணி காத்திருப்புக்குள் எனது உனது என உரிமை கொண்டாடும் விந்தை மனிதர்கள் !

உட்கார மனமில்லாமல் காற்றாட கால்போன போக்கில்
நடந்து கொண்டே அரசியல் விவாதங்கள் ,சீர்திருத்த யோசனைகள்
அனைத்தையும் பேசிக்கொண்டே நேரத்தை ப்போக்கிக்கொண்டிருக்கிறோம் !

இரயில் வந்து சேர உள்ளது என்ற அறிவிப்பு அனைவர் முகத்திலும் சிறு சந்தோசத்ை ஏற்படுத்தியது !

அதுவரை அமைதியாய் இருந்த மக்கள் திடீறென சுருசுப்பாய் நடை தளம் நோக்கி நகர

எல்லோரும் ஒன்றாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்று புரியாமல் மற்றவரை முந்தி செல்லும் சிலர்
வேடிக்கையாய் சிரித்துகொண்டே நாங்களும் நடக்க ஆரம்பித்தோம் !

மிகவும் மோசமான பராமரிப்பு செய்யப்பட்ட இரயில் பெட்டிகள் ,
வண்டியினுள் ஏறியவுடன் மூகம் சுழிக்க செய்யும் துர்நாற்றம் , மாசு படிந்த படுக்கைகள்
என்ன செய்ய வேறு வழி இல்லை !

புதிய முகங்கள் , புதிய அனுபவங்கள் ,இரயில் வந்து சேர்ந்த சந்தோசம் ,
இவை போதுமே !!
படுக்கையில் ஏறி சந்தோசமாய் தலைசாய்த்து
சொந்த மன் நோக்கி பயணிக்க முற்பட்டோம் !

No comments: