
< Good one !! goes well 4 all >
செம்மண் புழுதி படிந்த தடங்களில்
பாதைகளே தெரியாமல்
எங்கும் உதிர்ந்த சருகுகள் ..
இலைகளே இல்லாமல்
கிளைகள் மட்டுமே கொண்டு
வெற்றுக் கைகளை
நீட்டும் மரங்கள்..
வெற்றிடத்தில் சோலைகள் தேடி
சில வண்ணத்துப் பூச்சிகள்..
கூடுகள் வைக்க பசுமைகளை
தேடும் பல பறவைகள்..
உள்ளத்தில் உறுதியை
மட்டுமே கொண்டு
வெற்றுக் கைகளை மட்டுமே
ஏந்தி நிற்கிறேன்
ஒரு இலை உதிர் காலத்தில்..
உரம் உண்டு மனதில் எப்பொழுதும்..
திறம் கொண்டு தேடுகிறேன்
வாழ்க்கையின் சிகரங்களை..
வெற்றியின் சாமரங்கள் ஏனோ
தொலைவில் அசைகின்றன..
ஜெயத்தின் திசைகளை தேடி
என் பயணத்தை தொடங்குகிறேன்..
உதிர்பவை எல்லாம் துளிர்ப்பது
இயற்க்கையின் விதிகள் என்றால்..
மாற்றங்கள் தான்
காலத்தின் நியதிகள் என்றால்..
நாளைய வெளிச்சத்திற்கான
என் இலையுதிர் காலம் இது.
Courtesy இர.குமார்.(தமிழ் கவிதைகள் community)
No comments:
Post a Comment