Saturday, January 26, 2008

இந்த நாள் !!!!!

சனிக்கிழமை (26 'Jan '08)

போராளியின் மனம் ஏனோ காலை துயில் எலுகையில்,
தொட்டுவிடும் தூரத்தில் சுதந்திரம் இருந்தும்
போர்வைக்குள் சிறைப்பட்டுரிக்வே விரும்புகிறது ,
தண்டனை நீட்டிக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையுடன் ..



நண்பர்களுடன் பரஸ்பர குடியரசு தின வாழ்த்துகளுடன்
ஆரம்பமாகிறது புதிய நாள் ..

தங்கை ஒருத்த்ிக்காய் பொறியியல் கல்லூரியில் இடம்
வேண்டி கல்லூரி நிர்வாக அலுவலகம் செல்ல
மீறளவைத்தது நிர்வாக காலி இடத்த்ுகான தொகை ..
கொள்ளை அடிக்கும் கல்லூரிகளின் கொட்டத்தை அடக்க
நவயுக Robin Hood வரமாட்டார்களா என்ற ஏக்கம் மனதுதனில்

சட்டங்களையும் சட்டங்கள் இயற்றுபவர்களையும்
சலித்துக்கொண்டே லாயலோ கல்லூரி நோக்கி
பயாணப்படுகிறேன் ..
நண்பனின் தம்பியை காண ..

தம்பியிடம் உரையாடுகையில் விடியல் அமைப்புக்காக
Good Will அறநிறுவனம் * செல்ல உடன் அழைக்க ,
அவர் தன் நண்பர் ஒருவரின் ஆசையை என்னிடம் முன்வைத்தார் ..
ஆம் அப் பார்வை அற்ற இளைங்கன் ஆசைப்பட்டது
இசை அமைப்பாளன் ஆக
என்னவோ கிடைத்தது பி.காம் படிப்பதற்கான வாய்ப்பு ..
விரும்புவது வீட்டிற்கு தெரியாமல் இசை கற்பபதற்கு ,...
இசையின் வலிமையைய் சிறிது நேரம் சிந்திக்கலானேன் .,

விடியல் அமைப்பின் நண்பர் ஒவருடன்
GOOD WILL FOUNDATION'ஐ சென்றடைந்தோம் ,,
அழகான அந்த அடுக்குமாடி குடியிருப்பு ,
ஆர்ப்பாட்மில்லாமலால் மிக கனமான
வழியை சுமந்து கொண்டு,
கம்பீரமாய் காட்சி அளிக்கிறது ..

நிறுவனத்தின் நிறுவனறும் பார்வை அற்றவரே ,
அவரது பேச்சில் இருந்த தைரியம் ,நம்பிக்கை எனக்குள்
மாற்றத்தை உருவாக்கி கொண்டு இருந்தது
மறுக்க முடியாத உண்மை .
அங்கு பயிலும் பெண்களை சந்தித்து பேசும் போது ,
வாழ்க்கை இன்னும் அர்ததபபட்டுக் கொண்டிருந்தது ..
அத்தனையும் இருந்தும் குறை கூறம் நாம் ,
குறை இருந்தும் அவர்கள் வேண்டியது அவர்களின்
தேர்வு நேரங்களில் தேர்வு எழுத உதவும் கரங்கள் ,
நம்மால் உபயோகிக்கபட்டு உபயோகமில்லை என
தூக்கி ஏறியப்படும் பழைய காகித தாள்கள் இவை மட்டுமே ..

அவர்களின் தேவைகளை அறிந்து அங்கு இருந்து புறப்பட்டோம் ..

நண்பரின் தோழி குழந்தைக்காக பிறந்த நாள் பரிசு வாங்க
Spencer Plaza வில் உள்ள Landmark உள் நுழைத்தோம் ,
நண்பரை பரிசு வாங்க அனுப்பி விட்டு
எப்பொழுதும் போல் தமிழ் கவிதை புத்தக பிரிவில்
புத்தகங்களுள் தொழந்து போகலானேன்
சில மணிகளுள் ஒன்றரை புத்தகம்
படித்துவிட்டோம் என்ற திருப்தி,
135 ரூபாய் சேமித்து விட்டோம்
என்ற சந்தோசம் (சிக்கன நடவடிக்கை)

ஏதாவது சாப்பிடலாம் என்று நண்பர் வினவ
Fruit shop சென்று ஜூஸ் பருகலானோம் ,
அங்கு வெகு சிலரை தவிர பலர் வெளிநாடுகளை சேர்ந்தவர்களே
அமர்ந்திருக்க ,அவர்களின் செயல்களை சிறிதுநேரம்
கவனித்துவிட்டு ,நண்பரின் வேண்டுகொலுக்கு இணங்கி
Pizza Hut'இல் கஸ்டப்பட்டு கையால் Pizza'வை
சாப்பிட்ட பின் வீடு திரும்பினேன்.

காலை முதல் ஊர் சுற்றியத்தில் கொஞ்சம் சொம்பிபோக ,
சிறிய தூக்கத்திற்கு பின்
ஆழமான அனுபவங்களை ஆழிப் பேர் வலையில் சிறை செய்து கொண்டிருக்கிறேன் .,

No comments: