Impressions of a man who is still seeking answer for the life's tuffest question "What actually I want in life ?"to be precise " நிஜம் தேடும் பாமரன் "
Tuesday, January 1, 2008
புது வருட கொண்டாட்டம் !
31.12.2007 இரவு 11.42,
புது வருடம் கொண்டாட உலகம் ஆயத்தமாகி கொண்டிருக்கிறது ,
பணி நிமித்தல் காரணமாக இன்றும் தாமதமாகவே வீடு திரும்ப வேண்டிய நிலை ,
தெருவோர கடைதனில் உணவருந்தி கொண்டிருக்கிறேன் ,
பார்வை அற்ற யாசகம் வேண்டும் முதியவர் ஒருவர் , குதூகலமாக புது ஆண்டை வரவேற்க
பாட்டில் சகிதம் இளசுகள் என்னை கடக்கின்றனர் ..
ஒருவர்க்கு பார்வை விடிந்தால் கொண்டாட்டம் பின்னவர்களுக்கு கொண்டாட இதுவும் ஒரு காரணம் ..
இறைவா ஏன் இந்த விளையாட்டு ?
ஏனோ இம்முறை எனக்கு மது கொண்டாடத்த்ில் உடன்பாடில்லை ,
நண்பர்களிடம் வினவ அவர்களும் சம்மதித்தனர் .
புது வருடத்தை கேக் வெட்டி ,அப்பி அருந்தி புதுமையாக கொண்டாடினோம் !
புது வருடம் புதிய முயற்சிகளுடன் ஆரம்பமானது ,
ஆம் நண்பர்களுக்கு வாழ்த்து சொல்ல கால் (call) கிடைப்பதே கடினமாகிப்போனது.
வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து
மனம்தளரா முயற்சிகளுடன் முயற்சித்துக்கொண்டே
விண்ணில் மலர்ந்த வான் வேடிக்கைகளை ரசித்தபடியே ,
நண்பர்களுக்கு குருஞ்செய்தி அனுப்பி கொண்டிருந்தோம் ..
சில மணிகளில் எங்கும் இயல்பு நிலை திரும்ப நாங்களும் உறங்க சென்றோம் !
1-1-2008 இரவு 12.50
இப்புத்தாண்டை இன்னும் புதுமையாய் கொண்டாட விடியல் உறவுகளுடன்
சேர்ந்து கடவுளால் சிறப்பாய் ஆசீர்வத்ிக்கப்பட்ட குழந்தைகளை
காண பயணித்தோம் .
வெள்ளந்தி குழந்தைகளின் பேச்சு , செயல்கள்
எல்லாம் ஒரு சேர என் மனதை கண படுத்தத்ான் செய்தன ..
எப்போதும் குழந்தைகளுடன் சந்தோசமாய் சிரிக்கும் நான்
இன்று ஏனோ ஊதட்டலவில் மட்டும்
சிரிப்பது கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருந்தது !
இறைவா ஏன் இந்த விளையாட்டு ?
கொண்டாட்டம் தொடரும் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment