
(அடிபட்டு ஆபத்தான நிலையில் KMCH (KOVAI MEDICAL CENTER & HOSPITAL) - ICU 'வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அப்பா ,மன போராட்டங்களுடன் ICU ' வின் வெளியில் நான் )
ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கும் கூட்டம் ஒரு புறம்,
மதம் பாராமல் வேறு ஒருவருக்காக பிராதனைய் செய்ய வந்த வேற்று மத குருவை தங்கள் குழந்தை நல்ல படி
குணமடைய பிராத்தனை செய்ய வேண்டும் கூட்டு குடும்பம் மறு புறம்,
உயிர் போகும் தறுவாயில் இருக்கும் உறவை பார்க்க நிற்கும் கூட்டம் ஒரு புறம் ,
உறவை எப்படியேனும் காப்பாற்ற மருத்துவரிடம் மன்றாடும் மனிதர்கள் மறு புறம் .
உயிர் போன உறவை இறுதி ஊர்வலம் கூட்டி செல்ல காத்திருக்கும் குழுக்கள் ஒரு புறம்,
உறவுகளை துளைத்த துக்கத்தில் கூக்குறலிடும் கூட்டம் மறு புறம் .
உணர்வுகள் துளைத்து கடமையெ கர்மமாய் இருக்கும் ICU காவலாளி ,
உயிரற்ற உடல்களை உதவாத பொருள் போல் தூக்கி செல்லும் ஊழியர்கள் ,
தெய்வமாய் உருமாறி நிற்கும் மருத்துவர்கள் ,
என்றும் உதவும் கரங்களுடன் எனது மதிப்பிற்குரிய மாமா ,
ஈர கண்களுடன் எனது அம்மா ,
பக்குவ பட்டு கொண்டிருக்கும் நான் ,
எல்லோர் கண்ணில் மிஞ்சியது என்னவோ எதிர்பார்ப்பும் ஏக்கமுமே...
எங்கே போனது மானுட கர்வம் , நான் என்ற ஆணவம் , எனது என்ற உரிமை ,
எனது மதம் என்ற மிருகம் ???
ஆபத்து எனின் தான் மனிதம் வெளிப்படுகிறது , உறவுகள் தேடுகிறது ,நட்புகளை நாடுகிறது ஏன் இப்படி ?
"
செய்யும் தொழிலே தெய்வம் , தொழில் செய்யும் இடமே கோவில் ", இது
மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் மட்டுமே சரியாக பொருந்தும் !
"
காதலித்துப்பார் உலகம் அர்ததப்படும் ",
இது கள்ளிக்காட்டு கவிஞன் சொன்னது .
"
ICU முன் சில தினங்கள் இருந்து பார் ,அண்டம் அர்ததப்படும் "
இது இந்த மந்தங் காட்டு கவிஞன் சொல்வது !!
ஆடி அடங்கும் வாழ்க்கையடா மனிதா !!
ஆறடி நிலமே சொந்தமடா !