
பாடம் நடத்தும் பறவைகள்
------------------------------------------
பறவைகள் உலகத்தில்..
"பறுக்கை சோறு என்றாலும்
பகிர்ந்துண்ணும் காக்கையிடம்
கற்றுக்கொள்ளலாம்
பறவைநேய பண்பை".
"அவசரம் இல்லை என்றாலும்
அதிகாலையிலேயே எழுந்துவிடும்
சேவல் சொல்லித்தருகிறது
சுறுசுறுப்பை".
"பறக்கத் தெரியாவிட்டாலும்
மற்ற உயிர்களிடம்
பழகத் தெரிந்திருக்கிறது
பெங்குவின் பறவைக்கு".
"வறுமையிலும் பொறுமைகாக்க
தெரிந்து வைத்திருக்கிறது
மீன்கொத்தி பறவை".
"கலப்படமாக இருந்தாலும்
தரமானவற்றை மட்டும்
ஏற்றுக்கொள்ள் தெரியும்
அன்னப் பறவைக்கு".
"சிறிய உருவம்தான் என்றாலும்
எப்போதுமே சிரிப்புடன் இருக்கும்
சிட்டுக்குருவி".
No comments:
Post a Comment