Tuesday, September 25, 2007

வாழ்க்கை தத்துவம் !! < வெற்றியின் தத்துவமும் கூட >


அலுவல் முடித்து வீடு நோக்கி வேகமாய் பயணிக்கிறேன் ,
மிக சிறந்த வாகனம் என்ற ஆணவத்துடன் அசுர வேகத்தில்.
இருப்பினும் முன் செல்லும் பேருந்தை
என்னால் முன்னேற முடியவில்லை.
அறுகே ஆர்ப்பாட்டம் இல்லாமல் அனைவரையும்
முன்னேறி செல்கிறது ஒரு வாகனம்!
பின் தொடர்ந்தேன் புலப்பட்டது உண்மை !

முன் செல்வொரின் போக்கு அறிந்து ,
சமமானவர்களின் வேகம் புரிந்து ,
தன் பலம் தெரிந்து ,நோக்கம் தெளிந்து
நிதானமாய் முற்பட்டால் கிடைக்கும் வெற்றி என்று !!

சிந்தித்தேன் செயல்பட்டேன் !
வீடு சேர்த்தேன் வெற்றியுடனே (அனைவரையும் பின்தள்ளி),
தத்துவம் தேர்ந்த தெளிவுடன் !!

Saturday, September 22, 2007

நெட்டில் சுட்டவை


பாட‌ம் ந‌ட‌த்தும் ப‌ற‌வைக‌ள்
------------------------------------------

பறவைகள் உலகத்தில்..

"பறுக்கை சோறு என்றாலும்
பகிர்ந்துண்ணும் காக்கையிடம்
கற்றுக்கொள்ளலாம்
பறவைநேய பண்பை".

"அவசரம் இல்லை என்றாலும்
அதிகாலையிலேயே எழுந்துவிடும்
சேவல் சொல்லித்தருகிறது
சுறுசுறுப்பை".

"பறக்கத் தெரியாவிட்டாலும்
மற்ற உயிர்களிடம்
பழகத் தெரிந்திருக்கிறது
பெங்குவின் பறவைக்கு".

"வ‌றுமையிலும் பொறுமைகாக்க‌
தெரிந்து வைத்திருக்கிற‌து
மீன்கொத்தி ப‌ற‌வை".

"க‌ல‌ப்ப‌டமாக இருந்தாலும்
த‌ர‌மான‌வ‌ற்றை ம‌ட்டும்
ஏற்றுக்கொள்ள் தெரியும்
அன்ன‌ப் ப‌ற‌வைக்கு".

"சிறிய‌ உருவம்தான் என்றாலும்
எப்போதுமே சிரிப்புடன் இருக்கும்
சிட்டுக்குருவி".

Friday, September 21, 2007

சில முடிவுகள் தவறாகத்தான் செய்கின்றன !


கணிப்பொறியில் கைப்தித்து
வாழ்கையில் தடம் பதிக்க நினைத்து
கணினிதுறையில் கால்வைத்தபின்தான் புலப்பட்டதது
தவறாண தடம் வந்துவிட்டோம் ஏன்று !

உறவுகள் பிரிந்து,உறக்கம் துளைத்து உழைத்தும்
மிஞ்சுவது என்னவோ
Appraisal'க்கான எதிர்பார்ப்புதான் !
அதில் கிடைப்பதும் என்னவோ கூட்டாஞ்ச்சோற்றின் பங்குதான் ,
அதிரிப்தியெ ஆயினும்
இதில் வேறு வழி இல்லை .

கண்ணில் கண்ட வரை
இங்கு
கடின உழைப்பாளிகள் உழைத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் !
சுகாவாசிகள் சுகமகவேதான் இருக்கிறார்கள் .
அப்போ இங்கே உழைப்புக்கு மதிப்பில்லையொ ?

பணமே தான் வாழ்க்கை என்பதால்
இங்கு
மிக சிலரே மனிதனாய் வாழ்கிறார்கள்.

அப்படியாயின் மனிதம் பணம் சார்ந்ததா ?

எண்ணில் அடங்கா கேள்விகளுடன்
மனம் நெருடும் ஆதங்கங்களுடன்
மனிதனாகவே
இருக்க போராடவேண்டிய நிலை.

எங்கேயாவது
மனிதம் உயிருடன் உள்ளதா ?

கதிரவன்முன் கனவுகளை துளைத்துவிட்டு
அதை காரிருளில் தேடும் பாமரன் ...