Thursday, June 26, 2008

இரண்டு வருட வாசம் !



கல்லூரி கனவுகள் மெய்ப்பட
புதிய கனவுகள் சுமந்து L&T கூட்டுக்குள்
ஒன்றாய் பிரவேசித்தோம் ..

தோழமைகள் பல கொண்டு அழகாகவே
பயணித்திருக்கிறோம் இரண்டாண்டுகாலத்தை ..

கானக தென்றலின் தழுவல் போல் மென்மையாய்
கரைந்ததோடிய காலத்தின்மேல்
காதல் கொள்வதா இல்லை கவலைகொள்வதா ?

பொருள் தேடலில் இணைந்தாலும் பகிர்ததலில் தொடங்கிய
நம் நட்பிற்கு இன்று வயது இரண்டு !!

பொறுப்புகளால் பக்குவப்பட்டும் பிரச்சனைகளால் பண்பட்டும்
புரிதழில் வளர்ந்து நிற்கிறோம் !!

வாழ்வின் விசை மாற்றிய L&T'கு நன்றிகள் !!.

புதிய அனுபவம் சேர்க்க
சிறகு விரிக்கும் சிறகுகளுக்கு வாழ்த்துக்கள் !!!

வாழ்வோம் வாழ்விப்போம் !

நட்புடன் ,
வாஞ்சிநாதன்