எனது உலகத்திற்கு சென்றிருந்தேன் ,
கல்யாண கூத்தை கண்டு வர .
வழி நெடுக ஆங்காங்கே
அட போட வைக்கும் ஆச்சரியங்கள் .
ஈரோடு - பெருந்துறை நெடுஞ்சாலை
முற்றிலுமாய் நாலுவழிப்பாதையாய் ..
எங்கள் ஊரின் அகராதியில் தூரத்தின்
பொருளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது ..
வேகத்தின் அளவு திருத்தி எழுத பட்டுருகிறது
இம் மாற்றத்தில் சாதகங்கள் பல
பாதகங்களும் பல !!
முட்டி மோதி முதிர்ந்து நின்ற சாலையோரா மரங்கள்
மறக்கடைகளில் சுள்ளி விறகுகளாய் ..
வீடுகள் துளைத்து வீதிகளில் இடம் தேடும்
காக்கைகளுக்கு மிஞ்சியது கால்வழி மட்டுமே ..
பூத்தாடை போர்த்திய மிதப்பில் பொய்மை
சுமந்து சிலாகித்து நிற்கும் மாட்டுவண்டி தடங்கள் ..
சிலாகித்து நிற்கும் பெருமிதத்திற்கு பின்னால்
ஒளிந்திருக்கும் கூக்குரலை யார் அறிவார் ?