
எனக்கான முகவரியை உருவாக்க முயற்சிக்கையில்
முன்னோடிகழாக சிலரை தேர்வு செய்தபின்
ஏனோ மனம் எவரையும் ஏற்கவில்லை.
காரணம் ஓவொருவரும் ஒருவகையில்
சிறந்திருக்கின்றனர் தாழ்ந்திருக்கின்றனர்,
சிறப்புற்றவர் யாரும் பொறுப்புடயிர் இல்லை
பொறுபுற்றவர் யாரும் சிறப்பு பெற்றவர் இல்லை ..
இன்னாரின் பிள்ளை என்ற முகவரியை மாற்றுவதற்கான தேடல்..
ஆதலால் அப்பாவையும் பின்பற்ற மனமில்லை ..
படித்த புத்தகங்களும்,பட்ட அனுபவங்களும்
ஏனோ என்னை தெளிவுபடுத்த தவறிவிட்டன !!
குழம்பிய குளத்தில்தான் மீனை பிடிக்க முடியும் என்பர் !!
நானும் தேடுகிறேன் எனக்கான மீனை,குழம்பிய என் மனதில்
கிடைத்தபாடில்லை ..
என்னுடைய விளையாட்டை விளையாட முற்பட்டபின்
சட்டங்கள் மட்டும் வேற்றார் செய்வதா ?
இதுவரை முயற்சிக்காத புதிய துறை ..
புதிய முகங்கள் ..புதிய அனுபவதுக்கான தேடல் !!
குழப்பத்துடன் மனதில் ஒரு கேள்வி .
என்னால் முடியுமா ??
நம்பிக்கையில் மட்டுமே வாழ்கை நகர்வதால் ..
முடியும் என்று முழுமனதுடன் நம்புகிறேன் ..
முழுமனதாய் முயற்சிக்கிறேன் ..
முடியும் .. என்னால் முடியும் !!