Friday, December 28, 2007

என் முகவரி !!





எனக்கான முகவரியை உருவாக்க முயற்சிக்கையில்
முன்னோடிகழாக சிலரை தேர்வு செய்தபின்
ஏனோ மனம் எவரையும் ஏற்கவில்லை.

காரணம் ஓவொருவரும் ஒருவகையில்
சிறந்திருக்கின்றனர் தாழ்ந்திருக்கின்றனர்,

சிறப்புற்றவர் யாரும் பொறுப்புடயிர் இல்லை
பொறுபுற்றவர் யாரும் சிறப்பு பெற்றவர் இல்லை ..

இன்னாரின் பிள்ளை என்ற முகவரியை மாற்றுவதற்கான தேடல்..
ஆதலால் அப்பாவையும் பின்பற்ற மனமில்லை ..

படித்த புத்தகங்களும்,பட்ட அனுபவங்களும்
ஏனோ என்னை தெளிவுபடுத்த தவறிவிட்டன !!

குழம்பிய குளத்தில்தான் மீனை பிடிக்க முடியும் என்பர் !!
நானும் தேடுகிறேன் எனக்கான மீனை,குழம்பிய என் மனதில்
கிடைத்தபாடில்லை ..

என்னுடைய விளையாட்டை விளையாட முற்பட்டபின்
சட்டங்கள் மட்டும் வேற்றார் செய்வதா ?
இதுவரை முயற்சிக்காத புதிய துறை ..

புதிய முகங்கள் ..புதிய அனுபவதுக்கான தேடல் !!

குழப்பத்துடன் மனதில் ஒரு கேள்வி .
என்னால் முடியுமா ??

நம்பிக்கையில் மட்டுமே வாழ்கை நகர்வதால் ..
முடியும் என்று முழுமனதுடன் நம்புகிறேன் ..
முழுமனதாய் முயற்சிக்கிறேன் ..
முடியும் .. என்னால் முடியும் !!

Wednesday, December 19, 2007

Defeats !


இப்போதெல்லாம் எனக்கு தோல்விகள் பிடித்திருக்கிறது ,
வீழ்வதையும் விரும்புகிறென்
முயற்சிகளை வேகப்படுத்தி இருக்கிறேன்
இதற்கு காரணம் அண்மையில் படித்த அருமையான ஒரு வாசகம்

" The Game is not yet over , because i haven't won yet "

Sunday, December 2, 2007

ஹைக்கூ.

பிச்சைக்காரர்களின் ஆசை !



எங்களுக்கும் தான் ஆசை
ஒரு நாள் ஒரு வேளையாவது உண்ண வேண்டும் என்று !

சமீபத்தில் பதில் சொல்ல சிந்திக்கவைத்த ஒரு கேள்வி .


ஏன் இந்த வாழ்க்கை?

இளமை அனுபவிக்க வேண்டிய வயதாம்
இது யார் சொன்னது....

ஏன் இந்த வாழ்க்கை?
எதற்க்காக...


< வலையில் சிக்கிய சில துணுக்குகள் >

சமீபத்தில் ரசித்த அருமையான ஒரு ஜோக் !


சில எறும்புகளும் ஒரு யானையும்:
--------------------------------

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."